ரஃப் நோட்டு

ரஃப் நோட்டு

ரஃப் நோட்டு

விலை: 50/-
ஆசிரியர்:
வெளியீட்டாளர்: புக்ஸ் பார் சில்ரன்
பள்ளிக்கூட நாட்களில் நண்பர்கள் நமக்கு எவ்வளவு நெருக்கமானவர்களோ அதைபோல் நாம் பயன்படுத்திய ரப்நோட்டும் அவ்வளவு நெருக்கமானது என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.கிறுக்குவதாக இருக்கட்டும் படங்கள் வரைவதாக இருக்கட்டும் குறிப்புகள் எடுப்பதாக இருக்கட்டும் மனம் வேண்டியபடி பயன்படுத்தும் ஒரே நோட்டாக நமக்கு நெருக்கமாக இருந்திருக்கிறது.அப்படித்தான் இந்த கதையிலும் பாபு என்கிற எட்டாம் வகுப்பு பயிலும் மாணவனின் ரப்நோட் காணாமல் போய்விடுகிறது இவனது நோட் மட்டுமல்ல இவனது வகுப்பில் பயலும் அனைவரது ரப்நோட்டுகளும் மாயமாக காணாமல் போய்க்கொண்டே இருக்கிறது. பிறப்பிலேயே மந்த பார்வையுடனும் நியாபக மறதியும் தனக்கு தானே பேசிக்கொள்ளும் பழக்கம் உடையவன் என்பதால் அவனுடன் யாரும் நட்பு கொள்வதில்லை சுற்றுவட்டாரத்திலும் பயித்தியக்கார பிள்ளையென அனைவரும் சொல்ல மனம் நொந்து போகிறாள் அவனின் தாய். இப்படியான சூழலில் தான் மன நல மருத்துவரை அணுகுகிறார்கள் அவரும் அவனிடம் சில கேள்விகளை கேட்டுக்கொண்டு திருப்பி அனுப்பிவைத்துவிடுகிறார்.இந்நிலையில் தான் வகுப்பில் பயிலும் வடமாநில நண்பன் பிலிசிங் நட்பு மட்டுமே இவனுக்கு ஒரே ஆறுதலைக் கொடுக்கிறது.காணாமல் போன தன் ரப்நோட்டை பற்றி நண்பனிடம் சொல்ல தேடிப்பார்க்கலாம் என நண்பனும் ஆறுதல் கூறுகிறான்.இதே காலத்தில் தான் இவனது அனைத்து ரப்நோட்டுகளும் உடன் பயிலும் ஒரு நண்பன் வீட்டுக்கே வந்து அவனில்லாத போது வாங்கி செல்கிறான்.இதை அறிந்த பாபு பிலிசிங்கை அழைத்துக்கொண்டு குதிரையில் வந்து வாங்கி சென்ற நபர் யாராக இருக்குமென அவரை தேடி கடற் கரைக்கு செல்கிறார்கள்.இப்படியாக கடல்கரையை நோக்கி செல்லும் போது இப்புத்தகத்தின் முதல் கதை ஆரம்பிக்கிறது.... மானும் குதிரையும் சேர்ந்து ஒட்டகத்தை ஏமாற்றிய கதை என அடுத்தடுத்து தொடர்ந்து கதைகளை சொல்லிக்கொண்டே செல்கிறான்.கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பற்றும் கதை,கல்லாய் மரியா சீன அரசகுடும்பத்தின் கதை,அதிசய உரலின் கதை,தமிழ் மாதங்களும் ஆங்கில மாதங்களும் திருமணம் செய்துகொள்ளும் கதை,ஜப்பான் தேசத்து ராஜாவின் கதை,சுத்தியல் தத்தா ,நீண்ட காது கொண்ட தளபதி ,கஷ்டக் கடவுள் குறித்த கதை,மங்கோலிய நாட்டு சோம்பேறியின் கதை என வெள்ளி கடற்கரையின் மணற்பரப்பெங்கும் கதைகள் காற்றலைகளில் உலாவிக்கொண்டிருக்க சிறுவர்கள் பெரியவர்கள் என எல்லோருமே பெரும் கூட்டமாய் இவன் சொல்லும் கதையை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இப்படியாக பிலிசிங்கின் அண்ணன் பாபர்சிங் ஏற்பாடு செய்திருந்த ஒலிப்பெருக்கி மூலம் கடல்கரை எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. தொலைந்துபோன தன் ரப் நோட்டில் இருக்கும் ஒவ்வொரு கதையாக சொல்லிக்கொண்டே வர இவனது நியாபக சக்தியும் வலுப்பட்டு போகும் மாயமும் உடன் நிகழ்ந்து கொண்டு இருக்க சுற்றி இருப்பவர்கள் குரல் எழுப்ப தனது கடைசி கதையும் சொல்ல துவங்குகிறான்.அது போரினால் பாதிக்கப்பட்டு முகம் சிதைந்து உருமாறிய ஒரு ராணுவ வீரனின் கதை.ஒரு வழியாக அக்கதையும் சொல்லி முடிக்கும் முன்பாக கதைக்கான முடிவை சொல்லாமல் அனைவரையும் ஒருசேர ஏக்கத்தில் ஆழ்த்துகிறான்.உங்களுக்கு இந்த கதையின் முடிவு தெரியவேண்டுமென்றால் என் தொலைந்துபோன ரப்நோட்டை கண்டு பிடித்து தாருங்கள் பிறகு சொல்கிறேன் என கூற... கூட்டத்தை விலக்கிக்கொண்டு இவனது மன நல மருத்துவர் முன்னே வந்து உனது நியாபக மறதி எந்தவகையிலானது என்று கண்டுபிடிக்கவே உனது ரப்நோட்டுகளையெல்லாம் களவாடினேன் ஆனால் இப்போதோ உன்னுடைய நியாபக சக்தி அபாரமாக இருக்கிறதே என வியந்து போகிறார்.ஒருவழியே தொலைந்து போன ரப்நோட்டுகளின் ரகசியம் தெரிந்துபோக பாபுவும் கதையின் முடிவை சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவிடுகிறான். இவன் கதை சொல்லி முடிக்கும் தருவாயில் மாவட்ட ஆட்சியர் கடல்கரைக்கே வந்து இவனது நியாப சக்தியையும் புத்திகூர்மையையும் பாராட்டி இவன் சொன்ன கதைகளோடு அவனது கதையையும் சேர்த்து இவனைப்போன்ற மாணவர்கள் பயனுறும் வகையில் புத்தகமாக வெளியிட உத்தரவிடுவதாக கதை முடிவடைகிறது. நீதிக்கதை என்கிற பேரில் வரிக்குவரி எந்விதமான கட்டளைகளையும் இட்டுக்கொண்டு இருக்காமல் வேறு வேறு கதைகள் என பயனப்படும்போதே கதைக்குள் அதன் கதையோட்டத்தில் சிறுவர்களுக்கான நெறிமுறைகளை எல்லாம் சொல்லிக்கொண்டே போகிறார்.கதை போக்கில் சொல்லிக்கொடுக்கும் போதுதான் புரியாததும் புரிந்து போகும் என்கிற அடிப்படை உளவியலை மிக நுட்பமாக கதையின் வழியே மிகவும் நேர்த்தியாக கையாண்டு பார்த்திருக்கிறார் ஆயிஷா இரா.நடராசன். சிறுவர்களுக்கான கதைகூறல் முறையில் தொடர்ந்து புதுப்புது உத்திகளை கையாண்டு கொண்டே இருக்கும் நடராசன் அவர்களின் சமீபத்திய வரவான ஒரு தோழியின் கதை இந்த வரிசையில் புது வகை எனலாம்.கதைக்குள் கதை அதற்குள் இன்னொரு கதை என கதைகூருகிற முறையில் புதுபுது படிநிலைகளை சோதித்து பார்த்துக்கொண்டே வருவதோடு அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்.தமிழ் இலக்கிய வெளியில் சிறுவர்களுக்கான இலக்கியம் என்பது வெற்று வெளியாக காற்றடித்துக் கொண்டிருக்கிற சூழலில் தொடர்ந்து கல்வி சார்ந்தும் கல்வி உளவியல் சார்ந்தும் புதுப்புது உத்திகளின் வழியே சிறுவர்களுக்கான கதைகளை இயற்றிக்கொன்டே வரும் ஆயிஷா இரா.நடராசன் அவர்களின் கதைசொல்லும் முறையின் புதுவகையாகவும் அடுத்த படிநிலை நகர்வாகவும் வெளிப்பட்டு இருக்கிறது ரப்நோட்.
Buy from Alibris.

Overview

Disclosure of Material Connection: Some of the links in the page above are "affiliate links." This means if you click on the link and purchase the item, I will receive an affiliate commission. I am disclosing this in accordance with the Federal Trade Commission's 16 CFR, Part 255: "Guides Concerning the Use of Endorsements and Testimonials in Advertising."
Find A Local Bookstore
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>