பணம் செய்ய விரும்பு

பணம் செய்ய விரும்பு

பணம் செய்ய விரும்பு

Rs.70.00
ஆசிரியர்:
வெளியீட்டாளர்: விகடன் பிரசுரம்
உலக வாழ்வில் பணம் மட்டுமே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. இந்த வியாபார உலகத்தில் மனித இருத்தலுக்குப் பணமே பிரதானம் என்பதால் மக்கள் இரவு பகல் பாராமல் பொருள் தேடி பயணிக்கின்றனர். கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு, முக்கியப் பங்கு வகிக்கும் பணத்தை சேர்த்துவைக்க எண்ணியவர்கள் பலர். அந்த எண்ணத்தைச் செயலாக்கியவர்கள் சிறப்பாக வாழ்கின்றனர். எதிர்கால நலனுக்காக சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பணத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, உழைத்து பெரும் பாடுபட்டு சேமிக்கும் பணத்தை என்ன செய்வது என்று விழிக்கும் பலருக்கு வழிகாட்டவே ஆனந்த விகடன் இதழில் 'பணம் செய்ய விரும்பு' என்னும் தொடரை வழங்கினார்கள் நாகப்பன் _ புகழேந்தி. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நாம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, மேலும் பெருக்க வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன? அதனை எவ்வாறு செய்ய வேண்டும்? எந்தெந்த நிறுவனங்கள் மக்களின் பொருளாதார நலனுக்காக இயங்குகின்றன? அவற்றின் சாதக, பாதக நிலைகள் என்னென்ன? போன்ற சிறப்பான தகவல்களைத் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருக்கின்றனர் நூலாசிரியர்கள். நாணயம் விகடன
Buy from Alibris.

Overview

Disclosure of Material Connection: Some of the links in the page above are "affiliate links." This means if you click on the link and purchase the item, I will receive an affiliate commission. I am disclosing this in accordance with the Federal Trade Commission's 16 CFR, Part 255: "Guides Concerning the Use of Endorsements and Testimonials in Advertising."
Find A Local Bookstore
,

பணம் செய்ய விரும்பு-தேனம்மை லெக்ஷ்மணண்

பணம் செய்ய விரும்பு.. எனது பார்வையில்:-

அறம் செய விரும்பு என சொல்லி இருக்காங்க பெரியவங்க.. ஆனா இந்த கார்ப்பரேட் உலகத்துல நாம பணம் செய விரும்பணும்னு நாணயம் நாகப்பனும் புகழேந்தியும் சொல்றாங்க. நாணயம் நாகப்பன் சென்னை பங்குச் சந்தை இயக்குநர். புகழேந்தி பொறியாளர்.

ஒரு நாட்டோட பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் விஷயங்களில் பங்குச் சந்தை முக்கியமானது. தனி மனிதன் உயர்வதற்கும் நாட்டை உயர்த்துவதற்கும் கூட பொருளாதாரம் இன்றியமையாதது. பணத்தைப் பணத்தால் பெருக்கும் உபாயத்தை இதில் சொல்லி இருக்காங்க. நம்ம நாட்டுல இரண்டு சதவீதம் மக்கள்தான் பங்குச் சந்தையில் ஈடுபட்டு இருக்காங்கன்னு சொல்லி இருக்காங்க இவங்க.

மிச்ச மக்களும் தங்கள் பணத்தைப் பெருக்குவது எப்படின்னு இந்தப் புத்தகத்தைப் படிச்சுப் பார்த்துத் தெரிஞ்சுக்கலாம். வங்கியில் சேமிப்பு, அஞ்சலக சேமிப்பு, பிஎஃப், பி பி எஃப், வி பி எஃப், கடன் பத்திரங்கள், தங்கம் வெள்ளி, இன்சூரன்ஸ், சீனியர் சிட்டிசன்ஸ் ஸ்கீம் பத்தி எல்லாம் சொல்லிட்டு மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ஷேர்ஸ் பத்தி விலாவாரியா சொல்லி இருக்காங்க.

ஆனா தங்கம் வெள்ளி அவ்வளவு ஏறலைனு சொல்லி இருக்காங்க. இந்தப் புத்தகம் வந்து ( 2007 இல் எழுதப்பட்டிருக்கு ) சில வருடங்கள் ஆயிட்டதால் இதுல தங்கம் வெள்ளி புள்ளி விபரம் பார்த்தா பயங்கர வித்யாசமா இருக்கு இன்னைக்கு. 1982 இல் தங்கம் ( 24 காரட் தங்கம் 10 கிராம் விலை ) 1775. இன்னிக்கு ஒரு கிராம் தங்கமே 3000த்துக்கிட்ட. அதே போல் வெள்ளி ஒரு கிலோ 2715 ரூபாய் . இன்னிக்கு 70,000 சொச்சம்.

ரிஸ்க் இல்லாத சேமிப்பே இல்லை.. என்ன அதிர்ச்சியா இருக்கா. அப்பிடித்தான் சொல்றாங்க இவங்க. ரிஸ்க் கம்மியா உள்ள திட்டம் அல்லது  ரிஸ்க் மீடியமா உள்ள திட்டம் அல்லது ரிஸ்க் அதிகமா உள்ள திட்டம்  இதுதான் இருக்கு.
என்ன சொல்றாங்கன்னா வங்கிகள்ல சேமிப்பது ரிஸ்க் கம்மியா உள்ள திட்டம்தான் ஏன்னா அந்த வங்கிகள் “ டெப்பாஸிட் இன்ஷூரன்ஸ் அண்ட் கிரெடிட் கியாரண்டி கார்பரேஷன்” என்னும் அமைப்பில் காப்பீடு செய்து அதன் பிரிமியத்தை கரெக்டா கட்டி இருந்தால்தான் நாம் டெபாசிட் செய்த பணம் வங்கி திவாலானாலும் நமக்குத் திரும்பக் கிடைக்கும். இதுல நாம போட்ட பணத்தோட வட்டி ( 9 – 11 %)கிடைக்கும்.

அதேபோல மியூச்சுவல் ஃப்ண்டுகளில் நாம் போடும் பணத்தை அவர்கள் பங்குச் சந்தையிலேயே முதலீடு செய்வதால் அதன் ஏற்ற இறக்கம் பொறுத்தே நம்முடைய யூனிட்டுகளின் விலை ஏறும் அல்லது இறங்கும்.இது ரிஸ்க் மீடியமாக உள்ள திட்டம். இதில் லாபமும் நஷ்டமும் சரி பாதி உண்டு.

பங்குச் சந்தை நம் நாட்டின் அரசியல், யுத்த சூழ்நிலை, கச்சா எண்ணெய் விலை ஏற்றம் , தங்க இருப்பு பொறுத்து ஏறும் அல்லது இறங்கும். தங்கம் ( கூலி சேதாரமில்லாமல் ) ,  பலசரக்கு போன்றவற்றையும் பங்குச் சந்தையில் வாங்கி வைக்கலாம். இதில் லாபமும் அதிகம் கிடைக்கலாம். நஷ்டமும் அதிகமாகலாம். இதற்கு ஸ்டாப் லாஸ் போட்டு வைப்பது அவசியம்.

ரோல்மாடல்களைப் பின்பற்றுதல், வரவு செலவுக் கணக்கிடுதல், தினமும் பங்குச் சந்தையைக் கவனித்து நாமே நம் கணக்கில் பங்குகளை வாங்கி விற்க வேண்டும். ( நம்முடைய கண்காணிப்பு அவசியம்). இதற்கு இவர்கள் 1.  EVALUATE THE SEVERNITY, 2. ASSESS THE PROBABILITY, 3. DETECTABILITY  AND CONTROL MECHANISM ( STOP LOSS)   என்ற மூன்றையும் கைக்கொள்ளச் சொல்கிறார்கள்.

பணக்காரர்களைப் பற்றிய நம்முடைய மனோபாவத்தையும்  மனச்சிக்கலையும் பற்றிப் பேசுகிறது இந்நூல். மனோதத்துவம் கலந்த முதலீடு பற்றிப் பேசும் நூல் எனலாம். டிவிடெண்ட், போனஸ் ஷேர்ஸ், இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்ஸ்,புக் வால்யூ, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான், சிஸ்டமேட்டிக் ட்ரான்ஸ்ஃபர் ப்ளான் ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம், நிஃப்டி, சென்செக்ஸ், செபி போன்றவை பற்றியும், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் செயல்பாடுகள் பற்றியும் இதில் நன்கு தெரிந்து கொண்டு முதலீடு செய்யலாம்.

பெரியவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்துதல், சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்த வங்கி சேமிப்புக் கணக்கு ஆரம்பித்தல், மனைவியின் நிதித்திட்டத்தையும் கேட்டு ஏற்றுக் கொள்ளுதல் என்ற கூட்டு முயற்சியின் மூலம் நமது வருமானத்தைப் பெருக்கவும், முதலீட்டைத் தக்கவைத்துக் கொள்ளவும் முடியும் என ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். 2008 லேயே 4 பதிப்புக்களைக் கண்ட நூல் இது.

டே ட்ரேடர்ஸ் மாதிரி எடுத்தவுடன் ட்ரேட் செய்யாம பங்குச் சந்தையின் போக்கை நிதானமாக கவனித்து கணித்து வாங்கினால் வெற்றி நிச்சயமே. அப்புறம் நீங்க பணத்தை விரும்புற மாதிரி பணமும் உங்களை விரும்ப ஆரம்பிச்சுடும்.

http://honeylaksh.blogspot.in/2013/07/blog-post_4.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>