Author: யுவன் சந்திரசேகர்

வெளியேற்றம்

வெளியேற்றம்

Rs 320
வெளியேறுதலும் வெளியேற்றப்படுதலுமே மனித அனுபவத்தின் சாரமாக இருக்கின்றன. குடும்பம், நம்பிக்கைகள் மற்றும் தம்மைப் பீடித்திருக்கும் ஏதேனும் ஒன்றிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள்தாம் அந்த வெளியேற்றத்தை நிகழ்த்துகின்றன. அவை சில சமயம் தண்டனையாகவும் சில சமயம் விடுதலையாகவும் உருக் கொள்கின்றன. ஆனால் இதற்கு அப்பால் தன்னிசையாக வெளியேறிச்செல்லும் ஒருவரின் கதை இது. அவருடைய, அவரைச் சுற்றி வலைப்பின்னலாய்ப் படிந்திருக்கும் எண்ணற்ற மனங்களுடைய கதையும்கூட. More info →
Buy from Alibris.
பெயரற்ற யாத்ரீகன்

பெயரற்ற யாத்ரீகன்

விலை:110.00
பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. பாலினம், தேசம், காலகட்டம் இவற்றில் இருக்கும் வேறுபாடுகளால் பாதிக்கப்படாத ஒரே குரலில் பேசுபவை. தனிமையின் குரல் அது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக, அல்லது சமூகத்தை விட்டுத்தான் விலகிச்செல்ல முடிவெடுத்தன் காரணமாக உருவான தனிமை அல்ல. இயற்கையை, தோன்றி இருந்து மறையும் தனது இயல்பைத் தன்னிச்சையாய் எதிர்கொள்ளும் உயிர்ப்பொருளின் தனிமை. எதன் மீதும் புகாரற்ற, எதையும் நிராகரிக்காத தனிமை. எனவே அடங்கிய குரலில் பேசுகின்றன. More info →
Buy from Alibris.
நீர்ப்பறவைகளின் தியானம்

நீர்ப்பறவைகளின் தியானம்

Rs 200
வெவ்வேறு காலஇட அலகுகளை ஊடிணைத்து ஒரு வலை பின்ன முயலும்போது, பித்தம் தலைக்கேறிக் கிறுகிறுக்கிற மாதிரியான பரவசம் சித்திக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோற்றமளிக்கும் கதைகளை நுட்பமாகக் கோர்த்துச் செல்லும் சரடு சில சமயம் வெளிப்படையானது. பல சமயம் பூடகமாக இருப்பது. வாசகருக்கு இணையாக நானும் அந்தச் சரடைத் தேடிப் பிடிக்க முயல்கிறேன். கவிதை எழுதத் தொடங்கிய நாட்களில், ஒன்றுக்கு மேற்பட்ட படிமங்களைக் கோக்க முற்படும்போது, முற்றிலும் புதியதொரு வாசிப்பனுபவம் உருவாவதை உணர்ந்திருக்கிறேன், அதே விதமாக, புனைகதையிலும் நிகழ்த்திப் பார்ப்பதே என் ஆவல். More info →
Buy from Alibris.
ஏற்கனவே

ஏற்கனவே

Rs 100
சம்பிரதாயமான, வெளிப்படையான இருப்பின் சட்டகத்தைக் கனவினாலும் பிரக்ஞையாலும் தொடர்ந்து கலைத்துக் கொண்டிருப்பவை யுவன் சந்திரசேகரின் கதைகள். கதையின் ஆதார அழகியலையும் சுவாரசியத்தையும் விரித்தபடியே அதன் வழக்கமான வழிமுறைகளைக் கலைத்து மாற்றியமைக்கும் யுவன் சந்திரசேகரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. More info →
Buy from Alibris.
கானல் நதி

கானல் நதி

Rs 200
யுவன் சந்திரசேகரின் ‘கானல் நதி’ கலையின் எல்லையற்ற பிரகாசத்திற்கும் மனித இருப்பின் முடிவற்ற பெரும் துயருக்கும் இடையே ஒரு அக்னி நதியாக உருக்கொள்கிறது. இந்த நதி காலங்காலமாக மனித அனுபவத்தின் மீள முடியாத கனவொன்றை நம் நெஞ்சில் படரச் செய்கிறது. தனஞ்செயனைத் துரத்தும் விதியின் நிழல் எது? அது திரும்பத் திரும்ப சொல்லப்படும் இழந்த காதலின் தணியாத விம்முதல் மட்டும்தானா, அல்லது வீழ்ச்சிகளின் மன முறிவுகளின் யாரும்இனம் காண முடியாத விதியின் ரகசியங்களா? வாதையின் இடையறாது அதிரும் தந்திகளால் முடிவற்ற துயரத்தின் இசையை கசியச் செய்கிறது இந்நாவல். More info →
Buy from Alibris.