Author: சுஜாதா

ஜே.கே

ஜே.கே

Rs 85
ஆசிரியர்:
1971 ல் எழுதிய இந்தக் கதையின் இறுதியில் வரும் சம்பவம் 1991 ல் இந்திய சரித்திரத்தில் ஏறக்குறைய நடந்துவிட்டது. இதிலிருந்து முழுக்க முழுக்க கற்பனைக் கதை எழுதுவது எத்தனை சிரமம் என்பது புரியும். - சுஜாதா More info →
Buy from Alibris.
புதிய நீதிக் கதைகள்

புதிய நீதிக் கதைகள்

Rs 120
ஆசிரியர்:
சுஜாதாவின் புதிய நீதிக்கதைகள் வாழ்வின் சில எளிய உண்மைகளை அங்கதத்துடன் முன்வைக்கின்றன. அவை போதனைகள் அல்ல. பழைய நீதிக்கும் புதிய நீதிக்கும் இடையிலான வித்தியாசங்கள், முரண்பாடுகளைச் சொல்லும் இக்கதைகள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உவப்பூட்டும் அனுபவத்தைத் தருகின்றன. More info →
Buy from Alibris.
சுஜாதா பதில்கள் (இரண்டாம் பாகம்)

சுஜாதா பதில்கள் (இரண்டாம் பாகம்)

Rs 90
ஆசிரியர்:
சுஜாதா பதில்களின் இரண்டாம் பாகமான இந்நூல் அம்பலம் இணைய இதழில் அவர் வாசகர்களுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு. நகைச்சுவையின் குதூகலமும், அபிப்ராயங்களின் கூர்மையும் மிளிரும் இப்பதில்கள் உரையாடும் உணர்வை ஏற்படுத்துகின்றன. More info →
Buy from Alibris.
வேணியின் காதலன்

வேணியின் காதலன்

Rs 100
ஆசிரியர்:
இதில் வரும் வேணியை எந்த நகரத்திலும் நீங்கள் சந்திக்க முடியும். ஒருவிதமான சாஸ்வதமான இந்திய கீழ் நடு வர்க்கப் பெண் இவள். இவள் தன் உயிர்வாழ்தலுக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டும். காதல் என்பதெல்லாம், இவளுக்கு சந்தடி சாக்கில் வரும் உணர்ச்சிகளே! கூட்டத்தில் தள்ளிக்கொண்டு செல்வது போல விதி அல்லது ஓர் அபத்தமான நியதி இவளைத் தள்ளிக்கொண்டு செல்கிறது. ஏதோ தனக்கு நல்லது என்று பட்டதைச் செய்கிறாள். வேணியின் உண்மையான காதலன் யார் என்று நீங்கள் புத்தகத்தைப் படித்தபின் யோசித்துப் பார்க்கலாம். More info →
Buy from Alibris.
சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி

சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி

விலை:250.00
ஆசிரியர்:
சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கணேஷ்-வசந்த் குறுநாவல்களில் இது இரண்டாவது. கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்கள் ஒரு மர்மக்கதை ஆசிரியரின் உத்தேசங்களை நிறைவேற்றும் சாகசப்புனைவுகள் அல்ல. மாறாக, தர்க்க ஒழுங்கும் மனித இயல்பின் முரண்பாடுகளும் பலகீனங்களும் கொண்டவை. இந்த அம்சமே சுஜாதாவின் துப்பறியும் கதாபாத்திரங்களை பிற சாகச கதாபாத்திரங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை. இதன் காரணமாகவே கணேஷ்-வசந்த் வாசகர்களின் மனதில் இவ்வளவு நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குற்றத்தோடும் வன்முறையோடும் கொண்டிருக்கும் உறவைவிட, மனித இயல்புகள் சார்ந்து வெளிப்படுத்தும் நுட்பங்களே அதிகமானவை. சுஜாதாவின் அங்கதம் மிகுந்த நடை அதன் உச்சங்களைத் தொடுவது கணேஷ்-வசந்த் கதைகளிலேயே என்பதற்கு இந்தக் குறுநாவல் தொகுதியும் ஒரு உதாரணம். சுஜாதாவின் எழுத்து நடையைப்போலவே கணேஷ் -வசந்த் கதாபாத்திரங்களும் முதுமை அடைவதே இல்லை. More info →
Buy from Alibris.
தேர்ந்தெடுத்த சிறுகதைகள்-3

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்-3

Rs 240
ஆசிரியர்:
சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி. இதற்கு முன்பு வெளிவந்த இரண்டு தொகுதிகளும் வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றதுடன் சுஜாதாவின் இலக்கிய ஸ்தானத்தை அவை திட்டவட்டமாக உறுதி செய்தன. இத்தொகுதியில் அவர் மத்தியமர் கதைகள் வரிசையில் எழுதிய கதைகளுடன் வேறு சில கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சமகால மத்தியதர வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் இக்கதைகளில் சில அவை வெளிவந்த காலத்தில் சர்ச்சைகளை உருவாக்கின. அபூர்வமான கதைசொல்லும் முறை, மின்னலைப் போல் வெட்டிச் செல்லும் நடை, அசலான மனிதர்களை மறுபடைப்புச் செய்யும் நுட்பம் ஆகியவற்றால் இக்கதைகள் தமிழ்ச் சிறுகதை மொழிக்கு பெரிதும் வளம் சேர்த்தவை. More info →
Buy from Alibris.
கண்ணீரில்லாமல்

கண்ணீரில்லாமல்

Rs 30
ஆசிரியர்:
உயிர்மை இதழ் துவங்கப்பட்டபோது அதில் சுஜாதா 'கண்ணீரில்லாமல் . . .' என்ற தலைப்பில் சிக்கலான விஷயங்களை எளிதில் விளக்கக்கூடிய ஒரு தொடர் ஒன்றை ஆரம்பித்தார். இத்தொடரில் இத்தொடரில் யாப்பு, சங்ககாலம், காப்பியங்கள், சித்தர்கள், தனிப்பாடல்கள், மேற்கத்திய இசை, கணினித் தமிழ், திரைக்கதை, கிரிக்கெட், க்வாண்டம் இயற்பியல், கர்நாடக சங்கீதம், ஜென் போன்ற பல விஷயங்களை பற்றி எழுதவேண்டும் என்பது அவர் கனவு. ஆங்கிலத்தில் இத்தகைய மிக நேர்த்தியாக எழுதப்பட்ட எளிய அறிமுக நூல்கள் ஏராளமாகக் கிடைக் கின்றன. தமிழில் அத்தகைய சில நூல்களை எழுதவேண்டு மென்பதே அவரது கனவு. ஆனால் இந்தத் தொடர் உயிர்மையின் இதழ்களில் வெளிவந்து பிறகு தற்செயலான காரணங்களால் நின்று போனது. சுஜாதாவின் மறைவிற்குப் பின் இப்போது இந்தத் தொடரில் வெளிவந்த இக்கட்டுரைகள் முதன்முதலாக நூல் வடிவம் பெறுகின்றன. அவரது பரந்துபட்ட அக்கறைகளுக்கு இன்னொரு சாட்சியம் இந்த நூல். More info →
Buy from Alibris.
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி

சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி

விலை:400.00
ஆசிரியர்:
சுஜாதாவின் படைப்புகளை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் ஏற்கனவே அவருடைய குறுநாவல்களை இரண்டு தொகுதிகளாக கடந்த ஆண்டு பதிப்பித்தது. அந்த வரிசையில் அவரது குறுநாவல்களின் மூன்றாவது தொகுதி இது. இந்தத் தொகுதியில் கணேஷ் - வசந்த் இடம்பெறும் குறுநாவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் துப்பறியும் கதைகள் அல்லது குற்றம் சார்ந்த கதைகளின் இயல்பில் பெரும் மாறுதல்களைக் கொண்டுவந்தவர் சுஜாதா. குற்றங்களின் உளவியல் ரீதியான பின்புலங்கள் தர்க்க ரீதியான, அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த அணுகுமுறை ஆகியவை அவரது துப்பறியும் கதைகளை தனித்துவம் உள்ளதாக்குகின்றன. அந்தக் குற்றக்கதைகளில் இடம் பெறும் துல்லியமான பின்புலம் சார்ந்த விவரணைகளும் பாத்திர உருவாக்கமும் சம்பவங்களின் யூகிக்க முடியாத நூதனமான திருப்பங்களும் இந்தக் கதைகளை மர்மக்கதைகள் என்கிற எல்லையைத் தாண்டி முக்கியத்துவம் பெறச்செய்கின்றன. More info →
Buy from Alibris.
ஸ்ரீரங்கத்து கதைகள்

ஸ்ரீரங்கத்து கதைகள்

Rs 200
ஆசிரியர்:
ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்கள், ஒரு காலம் கடந்துபோனதன் இழப்புகள், மாறுதல்களை எதிர்கொள்ள இயலாதவர்களின் சீரழிவுகள் என்பன இக்கதைகளின் பின்புலமாக இருக்கின்றன. இரண்டு உலகங்களுக்கிடையே அலைக்கழியும் ஒரு வாழ்க்கை முறையினை விவரிக்கும் ஸ்ரீரங்கத்துக் கதைகள் சுஜாதாவின் துல்லியமான சித்தரிப்பு முறையினால் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் உயிர்பெற்று எழச் செய்கின்றன. More info →
Buy from Alibris.
கடவுள்களின் பள்ளத்தாக்கு

கடவுள்களின் பள்ளத்தாக்கு

Rs 165
ஆசிரியர்:
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் சுஜாதா எழுதி, எத்தொகுப்பிலும் இதுவரை இடம்பெறாத கட்டுரைகள் இவை. பயணம், சினிமா, அரசியல், சமூகம், வாழ்க்கை, எனப் பல்வேறு தளங்களில் விரியும் இக்கட்டுரைகள் சுஜாதாவுக்கே உரித்தான கூர்மையான நோக்குடனும் அங்கதத்துடனும் எழுதப்பட்டுள்ளன. மனதில் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்களை வரையும் Ôபெண்களுக்கு நானும்Õ கட்டுரையிலிருந்து பரவலான விவாதங்களை எழுப்பிய 'பில்கேட்ஸ் விரித்த டாலர் வலை' வரை பல்வேறு தொனிகளைக் கொண்ட கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. More info →
Buy from Alibris.
சுஜாதாவின் குறுநாவல்கள் 1

சுஜாதாவின் குறுநாவல்கள் 1

விலை:320.00
ஆசிரியர்:
இந்த முதல் தொகுதியில் இடம்பெறும் குறுநாவல்களில் பெரும்பாலானவை குற்றம், பிறழ்வு, மனித நடத்தையின் விசித்திரத்தோடு தொடர்புடையவை. அவை குற்றங்களின் மனோரீதியான ஊற்றுகளைத் தேடிச் செல்பவை. மனிதர்களின் பிறழ்வுகளை அவர்களின் அந்தரங்க மற்றும் சமூக வாழ்வின் பின்புலத்தில் வைத்துப் பார்க்க முயல்பவை. தம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்கள் வழியே செலுத்தப்படும் மனிதர்களின் செயல்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவை. இந்தக் குற்றங்களுக்குப் பின்னே இருக்கும் காரணங்கள் எளிமையானவை. பாலியல் சார்ந்த பிறழ்வுகள், அந்தரங்க ஆசைகளுக்கும் சமூக நியதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள், மனித மனதின் அடியாழத்தில் நீக்கமுடியாத குற்ற வேட்கை, எல்லா உறவுகளுக்குள்ளும் காத்திருக்கும் துரோகத்தின் நிழல், ஆளுமைச் சிதைவுகளை உருவாக்கும் புறச்சூழல்கள், நவீன வாழ்க்கை முறையின் விசித்திரங்கள், குழப்பங்கள், நிராசைகள், பேராசைகள், இயலாமைகள் என இவை அனைத்தும் எந்த ஒரு எளிய சாதாரண மனிதனையும் எந்தக் கணத்திலும் குற்றம் என்ற எல்லைக்குள் கொண்டு செலுத்தக்கூடியவை என்பதையே இந்தக் குறுநாவல்கள் பேசுகின்றன. இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் யாரும் எதிர்மறை கதாபாத்திரங்கள் அல்லர். இக்கதைகளில் குற்றங்களுக்குப் பலியாகிறவர்கள் போலவே அந்தக் குற்றங்களை இழைப்பவர்களும் வாழ்வின் துர்க்கனவுகளுக்குப் பலியானவர்களே. More info →
Buy from Alibris.
விஞ்ஞானச் சிறுகதைகள்

விஞ்ஞானச் சிறுகதைகள்

Rs 340
ஆசிரியர்:
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுஜாதா எழுதி வந்திருக்கும் விஞ்ஞானச் சிறுகதைகளின் முழுத் தொகுப்பு முதன் முதலாக வெளிவருகிறது. தமிழில் விஞ்ஞானக் கதைகளின் முன்னோடியான சுஜாதாவின் இப்படைப்புகளில் நிகழ்காலமும் எதிர்காலமும் அறிவியலும் புனைவும் யதார்த்தமும் கனவும் கலந்து மயங்குகின்றன. கால மாற்றத்தால் புதுமை குன்றாத இக்கதைகள் வாசகர்களின் மனதில் தீராத வினோதங்களைப் படைக்கின்றன. More info →
Buy from Alibris.
தமிழ் அன்றும் இன்றும்

தமிழ் அன்றும் இன்றும்

Rs 145
ஆசிரியர்:
சுஜாதா 2003-2004 காலப்பகுதியில் அம்பலம் இணைய இதழில் ஓரிரு எண்ணங்கள் என்ற தலைப்பில் எழுதிய இக்கட்டுரைகள் முதன்முதலாக அச்சில் வெளிவருகின்றன. தமிழ்க் கணினி, புறநானூறு, பிரபந்தம், ஸ்ரீரங்கம், தமிழ் சினிமா முதலானவை குறித்த கட்டுரைகளும் சமீபத்தில் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சுஜாதா அளித்த பதில்களும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ரசிகமணி டி.கே.சி, சாவி, பி.வி.பார்த்தசாரதி, புத்தகப் பித்தன், மௌனி குறித்த நினைவுகள், பார்வைகள் இத்தொகுப்பிற்கு வளம் சேர்க்கின்றன. More info →
Buy from Alibris.
சுஜாதாவின் குறுநாவல்கள் 2

சுஜாதாவின் குறுநாவல்கள் 2

விலை:360.00
ஆசிரியர்:
சுஜாதா குறுநாவல்கள் இரண்டாம் தொகுதியில் முதல் தொகுதியைப் போலவே பத்துக் குறுநாவல்கள் இடம்பெறுகின்றன. பெருநகர் சார்ந்த மனோபாவங்களையும் நெருக்கடிகளையும் ஒரு வலைப்பின்னல் போன்ற கதையமைப்பினால் எழுதிச் செல்லும் சுஜாதாவின் இந்தக் குறுநாவல்களில் பல அவை வெளிவந்த காலத்திலிருந்து தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருபவை. இந்தத் தொகுதியில் உள்ள குறுநாவல்களை மொத்தமாக வாசிக்கும் போது நவீன வாழ்க்கை என்ற சிக்கலான பொறியமைப்பிற்குள் தன்னிச்சையின்றிக் கொண்டு செலுத்தப்படும் மனிதர்களின் போராட்டங்கள் உக்கிரமாக எழுதப்படுகின்றன. இந்தப் பொறியமைப்பிற்குள் சுய தேர்வுகளுக்கு இடமில்லை. தற்செயல்கள், அபத்தங்கள் வழியே மீள முடியாத சுழல்களுக்குள் சிக்கிக் கொள்கிறவர்கள்தான் சுஜாதாவின் பெரும்பாலான கதாபாத்திரங்கள். More info →
Buy from Alibris.
காந்தளூர் வசந்தகுமாரன் கதை

காந்தளூர் வசந்தகுமாரன் கதை

Rs 130
ஆசிரியர்:
'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை 'கட் அவுட்' பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்திர சம்பவங்கள் அனைத்தும் ஆதாரமுள்ளவை. நீலகண்ட சாஸ்திரி, பர்ட்டன் ஸ்டைன், சதாசிவப்பண்டாரத்தார் போன்றவர்கள் விஸ்தாரமாக எழுதியிருக்கும் சரித்திரக் குறிப்புகளை ஆதரித்தவை. More info →
Buy from Alibris.
கடவுள்

கடவுள்

Rs 200
ஆசிரியர்:
இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுடியாத புதிரே இத்தொகுப்பின் மைய இழையாக இருக்கிறது. அறிவியலுக்கும்நம்பிக்கைகளுக்கும் இடையே இந்நூல் நம்மை ஆழமானசிந்தனைகளுக்கு இட்டுச் செல்கிறது. More info →
Buy from Alibris.
புறநானூறு ஓர் எளிய அறிமுகம்

புறநானூறு ஓர் எளிய அறிமுகம்

Rs 225
ஆசிரியர்:
தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீனத் தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார். முதல் தொகுதியாக வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற இந்நூல் இப்போது நானூறு பாடல்களுக்குமான விளக்கத்துடன் முழுத் தொகுதியாக வெளிவருகிறது. சுருக்கமும் தெளிவும் கவித்துவமும் கொண்ட சுஜாதாவின் விளக்க உரை கால இடைவெளியைத் தாண்டி இந்நூலுடன் வாசகனை உறவாடச் செய்கிறது. More info →
Buy from Alibris.
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி)

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி)

Rs 250
ஆசிரியர்:
சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கின்றன. வெளிவந்த காலத்தில் வாசகர்களிடம் ஆழ்ந்த சலனங்களை உருவாக்கிய 'நகரம்', 'பார்வை', 'ரேணுகா', 'எல்டொராடோ', 'கால்கள்', 'தீவுகள் கரையேறுகின்றன' உள்ளிட்ட பல முக்கியக் கதைகள் அடங்கியது இத்தொகுப்பு. வாழ்வின் சில ஆதார குணங்களையும் அபத்தங்களையும் மிக நெருக்கமாகத் தொட்டுச் செல்லும் இக்கதைகள் காலமாற்றத்தால் புதுமை குன்றாதவை. More info →
Buy from Alibris.
கணையாழி கடைசிப் பக்கம்

கணையாழி கடைசிப் பக்கம்

Rs 350
ஆசிரியர்:
சுஜாதா கணையாழியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல், வேடிக்கைகள் என விரியும் இப்பத்திகள், வெளிவந்த காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டவை; விவாதிக்கப்பட்டவை. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.என்ற பெயரிலும் சுஜாதா என்ற பெயரிலும் 'நீர்க்குமிழிகள்', 'பெட்டி', 'கடைசிப்பக்கங்கள்' எனப் பல தலைப்புகளில் இவை எழுதப்பட்டன. சுஜாதா என்ற ஆளுமையின் பல்வேறு தோற்றங்களையும் அந்தந்தக் காலகட்டத்தின் பதிவுகளையும் கொண்ட இந்நூல் ஓர் அரியஆவணமாகத் திகழ்கிறது. More info →
Buy from Alibris.
சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமும்

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமும்

Rs 200
ஆசிரியர்:
பாரதி 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ்-'லாஸ்ட் டச் வித் டமில் யார்'-இளைஞர்களின் நெஞ்சை அள்ளச் சிலப்பதிகாரத்தின் கதையையும், அழகான அமைப்பையும், உவமைகளையும் எளிய முறையில் சொல்ல வேண்டியது தேவை என்று எண்ணினேன். அதன் விளைவுதான் இந்நூல். சிலப்பதிகாரத்தைப் படித்தபோது எனக்கு மிஞ்சிய ஒரு மகா வியப்பு. அதன் காலத்தைக் கடந்த நவீனம், Contemporaneity இன்றும் புதிதாக இருக்கும் கதையும் கதை சொல்லும் முறையும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடிந்தால் இந்த எளிய உரையின் பயன் கிட்டியதாகச் சொல்வேன். More info →
Buy from Alibris.