Author: எஸ். ராமகிருஷ்ணன்

பறவைக் கோணம்

பறவைக் கோணம்

Rs 120
திரை இசைப்பாடல்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை மட்டுமில்லை. அவை எளிய மனிதர்களின் சுக துக்கங்களை சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலைவடிவமாகும். வேறு எந்தக் கலைவடிவத்தை விடவும் மக்களால் அதிகம் ரசிக்கப்படுவது திரைப்படங்களே. அதிலும் குறிப்பாக திரை இசைப்பாடல்களே. சினிமா பாடல்களைக் கேட்கும் ஒவ்வொருவரும் அதைத் தன் மனதின் பாடலாக உருமாற்றிக் கொண்டுவிடுகிறார்கள். தமிழ் திரை இசைப்பாடல்கள் உருவாக்கிய பாதிப்பையும் அதன்வழியாக உருவான ரசனையையும் முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் சினிமாவின் கண்டுகொள்ளப்படாத சாதனைகள் குறித்து விரிவாக நமக்கு அடையாளம் காட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சினிமா பாடல் என்பது ஒரு மாயக்கண்ணாடி. அது கேட்பவரின் மனநிலைக்கு ஏற்ப வேறுவேறு தோற்றங்களை உண்டாக்கி காட்டுகின்றன என்பதை எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கட்டுரைகள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. More info →
Buy from Alibris.
விழித்திருப்பவனின் இரவு

விழித்திருப்பவனின் இரவு

Rs 150
நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு. இப்படைப்பாளிகள் குறித்த பொதுவான இலக்கிய பிம்பங்களைத் தாண்டி அவர்களது கனவும் பைத்திய நிலையும் கொண்ட வேட்கைகளை, தேடல்களை விரிவாகப் பதிவு செய்யும் இக்கட்டுரைகள் உயிர்மை இதழில் தொடராக வெளிவந்து பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன. வெறும் தகவல் குறிப்புகளாக அல்லாமல் தீவிர மன எழுச்சியையும் படைப்பாளியின் சவால்கள் குறித்த உக்கிரமான கேள்விகளையும் எழுப்பும் இந்நூல் ஒரு ஆய்வாளனின் கடும் உழைப்பும் ஒரு படைப்பாளியின் தீவிர அழகியலும் கொண்டதாகத் திகழ்கிறது. More info →
Buy from Alibris.
உறுபசி
கூழாங்கற்கள் பாடுகின்றன

கூழாங்கற்கள் பாடுகின்றன

Rs 60
ஜென் என்பது ஒரு விடுதலை உணர்வு. அதைச் சொற்களால் முழுமையாக விளக்கிக் காட்ட முடியாது. சொற்களைக் கடந்து நாம் உணர மட்டுமே முடியும். அதன் ஒரு வெளிப்பாடே ஜென் கவிதைகள். எஸ்.ராமகிருஷ்ணனின் பாஷோ துவங்கி இசாவரை முக்கியமான ஜப்பானிய ஜென் கவிஞர்களையும் அவர்களின் கவிதையுலகினையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இதன் வழியே ஜென் கவிதைகளின் எளிமையையும் அடர்த்தியையும் தனித்துவமான மொழியையும் எளிதாக நாம் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. என்பதே இக்கட்டுரைகளின் சிறப்பு. ஜென் நமக்குள் மாறாத சந்தோஷத்தை, அகமலர்ச்சியை உருவாக்குகிறது. ஜென் கவிதைகளின் வழியும் அதுவே. எஸ்.ராமகிருஷ்ணன் ஜென் கவிதைகள் குறித்த புரியாமையை அகற்றி நுட்பமான வாசிப்பு அனுபவத்தை தருகிறார். More info →
Buy from Alibris.
அதே இரவு அதே வரிகள்

அதே இரவு அதே வரிகள்

Rs 150
எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய அட்சரம் இலக்கிய இதழில் வெளியான மொழிபெயர்ப்புகளின் தேர்தெடுத்த தொகை நூல் இது. நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் நேர்காணல்கள், நோபல் பரிசு ஏற்புரைகள், உலக இலக்கிய கட்டுரைகள், மொழிபெயர்ப்பு கதைகள் ஆகியவை இதில் இடம் பெறுகின்றன. இதில் மார்க்வெஸ், இசபெல் ஆலண்டே, போர்ஹே, குந்தர் கிராஸ், மிலாராட் பாவிக், மிலன் குந்தேரா, காப்கா, தஸ்தாயெவ்ஸ்கி, மாபௌஸ், ஜோசே சரமாகோ, கென்சுபரோ ஒயி, ஏ.கே.ராமானுஜம் உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தத் தொகுப்பின் வழியே உருவாகும் படைப்பனுபவமும் கருத்தாக்கங்களும் மிகுந்த மன எழுச்சியை உருவாக்குகிறது. உலக இலக்கியத்தின் ஆதாரமான சுருதியை கோடிட்டுக் காட்டுகிறது. More info →
Buy from Alibris.
உறுபசி

உறுபசி

Rs 75
நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது. More info →
Buy from Alibris.
இருள் இனிது ஒளி இனிது

இருள் இனிது ஒளி இனிது

Rs 110
உலக சினிமா பார்வைகள் . உலக சினிமாவில் ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது. மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் சூழல், அனிமேஷன் திரைப்படங்களின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று பிரக்ஞை கொண்ட திரைப்படங்கள் குறித்தும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. More info →
Buy from Alibris.
காற்றில் யாரோ நடக்கிறார்கள்

காற்றில் யாரோ நடக்கிறார்கள்

Rs 200
என் கட்டுரைகள் எளிமையானவை. அவை ஒரு வாசகன் அல்லது பார்வையாளன் என்ற முறையில் என் மனதின் பிரதிபலிப்புகளை, நான் உள்வாங்கிக் கொண்ட விஷயங்களை முன்வைக்கின்றன. ஆனால் இவை வெறும் ரசனையின் பிரதிபலிப்புகள் மட்டுமில்லை. அதைத் தாண்டிய தளங்களை கவனத்திற்கு உட்படுத்துகின்றன. என் தனிமையைப் பகிர்ந்து கொண்ட இந்தப் புத்தகங்கள், சினிமா, இசை போன்றவை உங்களுக்குள் நிரம்பியுள்ள தனிமையையும் போக்கக்கூடும் என்ற பகிர்தலே இந்தக் கட்டுரைகளின் அடிப்படை. இதில் பெரும்பான்மை என் இணையத் தளத்தில் வெளியானவை. அத்தோடு கல்குதிரை, கணையாழி, அட்சரம் போன்ற இலக்கிய இதழ்களிலும், விகடன், குமுதம், தினமணி, சண்டே இந்தியன் போன்ற வார இதழ்களிலும் வெளியானவை. More info →
Buy from Alibris.
செகாவின்மீது பனிபெய்கிறது

செகாவின்மீது பனிபெய்கிறது

Rs 130
உலக இலக்கிய ஆளுமைகள் தமிழ் நவீன இலக்கியத்தை உருவாக்கியதில் ரஷ்ய இலக்கியங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, செகாவ், கோகல், புஷ்கின். துர்கனேவ், லெர்மன்தேவ், குப்ரின், கொரலங்கோ, சிங்கிஸ் ஐத்மாதவ் என்று நீளும் ரஷ்ய இலக்கியப்படைப்புகளே தனது ஆதர்சம் எனும் எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்த தனது ஆழ்ந்த புரிதலையும் அனுபவத்தையும் இந்த நூலின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார். More info →
Buy from Alibris.
கால் முளைத்த கதைகள்

கால் முளைத்த கதைகள்

Rs 130
உலகம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு இன்றுவரை முழுமையான விளக்கம் கிடைக்கவில்லை. விஞ்ஞானம் புதிய புதிய கருதுகோள்களோடு விளக்கங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப் போல வசீகரமாகியிருக்கின்றன. உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வாசிப்பதற்காகவும் திரும்பச் சொல்வதற்குமே இந்தமுயற்சி மேற்கொள்ளப்படுகிறது. More info →
Buy from Alibris.
இலைகளை வியக்கும் மரம்

இலைகளை வியக்கும் மரம்

Rs 90
எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள், அவரது கதைகளைப் போலவே மிக நுட்பமானவை. ஊர்சுற்றுதல், கவிதைகள், நாட்டார் இலக்கியம், இலக்கிய ஆளுமைகள், தினசரி வாழ்வின் குறிப்புகள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் இந்தப் பதிவுகளின் அடித்தளமாக இருப்பது எதிலும் தேங்கிவிடாத படைப்பாளியின் முடிவற்ற தேடல். தினசரி வாழ்வின் ஊடாக வெளிப்படும் அற்புதக் கணங்களை அடையாளம் காண்பதிலும், இயற்கையின் தீண்ட முடியாத தனிமையை எதிர்கொள்வதிலும், கவிதையின் ரகசியச் செயல்பாட்டிலும் அலைவு கொள்ளும் இந்தக் கட்டுரைகள் புதிய வாசிப்பு அனுபவத்தை உருவாக்கக்கூடியவை. இணையத்திலும் சிற்றிதழ்களிலும் வெளியான இருபது முக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு. More info →
Buy from Alibris.
என்றும் சுஜாதா

என்றும் சுஜாதா

Rs 225
இந்த புத்தகம் Sujatha Reader அல்ல. இது சுஜாதாவின் பன்முகத்தன்மை என நான் எதைக் கருகிறேன் என்பதற்கான தொகைநூல். சுஜாதா என்ற எழுத்து ஆளுமையின் பரந்துபட்ட விருப்பங்கள், ஈடுபாடுகள், அக்கறைகளையே நான் முதன்மைப்படுத்தியிருக்கிறேன். ஆகவே இது சுஜாதா படைப்புலகின் ஒரு குறுக்குவெட்டுப்பார்வை போல உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. எஸ்.ராமகிருஷ்ணன் More info →
Buy from Alibris.
உறுபசி
ரயிலேறிய கிராமம்

ரயிலேறிய கிராமம்

Rs125
உலகப் புகழ்பெற்ற 30 அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புத்தகங்கள் நம்மை வேறுவேறு உலகில் வேறு அடையாளங்களுடனும் வாழவைக்கின்றன. ஒரு புத்தகம் மட்டும் துணை இருந்தால் போதும் எந்தத் தீவிலும் வாழ்ந்து விடலாம். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகள் தமிழ் வாசகனுக்கு உலக இலக்கியத்தின் வாசலைத் திறந்து விடுகின்றன. எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ் More info →
Buy from Alibris.
எனதருமை டால்ஸ்டாய்

எனதருமை டால்ஸ்டாய்

Rs 100
இலக்கியம் என்ற மகத்தான நதிதான் மனித மனங்கள் வெறுப்பாலும் வன்முறையாலும் உருவாக்கும் தடையரண்களை உடைத்து வாழ்வின் மகத்தான பிரவாகத்தை எங்கெங்கும் கொண்டு செல்கிறது. மாபெரும் இலக்கியப் படைப்புகள் உலகம் முழுவதும் தமது வெளிச்சத்தை, காலத்தையும் இடத்தையும் தாண்டி எங்கும் பரவச் செய்துகொண்டிருக்கிறது. அந்த நதியின் தண்ணீரைக் கையளவு எடுத்து, அந்த வெளிச்சத்தின் பிரகாசத்தை ஒரு சுடரளவு ஏற்றிப் பகிர்ந்துக் கொள்ளும் முயற்சிதான் இந்தக் கட்டரைகள். எஸ்.ராமகிருஷ்ணன் டால்ஸ்டாய் துவங்கி தாகூர் வரை தனக்கு விருப்பமான ஆளுமைகளை அவர்களது படைப்பு மற்றும் செயல்பாடுகளின் வழியே அறிமுகம் செய்து வைக்கிறார். More info →
Buy from Alibris.
நகுலன் வீட்டில் யாருமில்லை

நகுலன் வீட்டில் யாருமில்லை

Rs 110
நகுலன் வீட்டில் யாருமில்லை நகுலன் வீட்டில் யாருமில்லை நகுலன் வீட்டில் யாருமில்லை எனும் குறுங்கதை வடிவம் உலகெங்கும் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக எழுதப்பட்ட போதும் தமிழில் அத்தகைய முயற்சிகள் போதுமான அளவு நடைபெறாத சூழலில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு வெளிவருகிறது.. இக்கதைகள் குறுங்கதைகளுக்கே உரிய கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டுள்ளன. மிகக் கூர்மையான அங்கதத்தினையும் தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தும் இக்கதைகள் மரபான நம்பிக்கைகள், தொன்மங்கள், கவித்துவமான உருவகங்கள் வழியே நவீன வாழ்வு குறித்து தீவிரமான பிரக்ஞையைக் கொண்டிருக்கின்றன. இதில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை முதல்முறையாக இந்தப் புத்தகத்தில்தான் அச்சேறுகின்றன. More info →
Buy from Alibris.
காஃப்கா எழுதாத கடிதம்

காஃப்கா எழுதாத கடிதம்

Rs 200
புத்தகங்களும் பயணங்களுமே எனது இரண்டு சிறகுகள். இதன்வழியே நான் அடைந்த அனுபவங்கள் மகத்தானவை. உலக இலக்கிய ஆளுமைகளையும் அவர்களின் முக்கிய நூல்களையும் குறித்து தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன். அந்த வரிசையில் காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெர்மென் மெல்வில், தோரோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க், மிரோஜெக், ரேமண்ட் கார்வர், விளாதிமிர் மெக்ரே ,வியோலெட் லெடுக், செல்மா லாகர்லெவ் போன்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூலிது. ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும் என பைபிளில் ஒரு வரி இடம்பெற்றிருக்கிறது. அது மரத்திற்கு மட்டுமானதில்லை, எழுத்தாளர்களுக்கும் பொருந்தக்கூடியதுதானே. More info →
Buy from Alibris.
வெளியில் ஒருவன்

வெளியில் ஒருவன்

Rs 90
முதல் தொகுப்பினை மறுபடியும் கையில் எடுத்து வாசித்துப் பார்ப்பது என்பது பழைய கறுப்பு வெள்ளை புகைப்படத்தைக் கையில் வைத்து பார்ப்பதைப் போன்றது. நானும் வளர்ந்திருக்கிறேன், எனது எழுத்தும் வளார்ந்திருக்கிறது. இந்த மாற்ற்ங்களை ஏற்படுத்திய காலம் இரண்டினையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. முதல் தொகுப்பு வெளியாகின்ற நாளில் இதை எத்தனை பேர் வாசிக்கப்போகிறார்கள், எவ்வளவு வரவேற்பு பெறும் எனத் தெரியாத நடுக்கமும் கவலையும் இருந்த்தது. ஆனால், புத்தகம் வெளியான சில வாரங்களிலே பெரிய வரவேற்பு பெற்றதுடன் இன்றுவரை எனது முதற்தொகுப்பின் கதைகளைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகின்றவர்களைக் காணமுடிகிறது. அந்த வகையில் நான் பாக்கியசாலி. இன்று எனது முதற்தொகுப்பு அப்படியே மறுபதிப்பு காணுவது சந்தோஷம் தருகிறது. என்றோ பள்ளிவயதில் நோட்டில் ஒளித்துவைத்த மயிலிறகை திரும்பக் கண்டெடுத்துப் பார்ப்பது போல மனது குதூகலம் அடைகிறது. More info →
Buy from Alibris.
சாப்ளினுடன் பேசுங்கள்

சாப்ளினுடன் பேசுங்கள்

விலை:150.00
உலக சினிமா பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகள் ஒரு மகத்தான கலையின் அற்புதமான தருணங்களை நம்முள் மீள்படைப்புச் செய்பவை. பிம்பங்களின் பின்னே ததும்பும் வாழ்வின் மகத்தான தரிசனங்களை இனம் காட்டுபவை. சினிமாவைப் புரிந்துகொள்வதற்கான காட்சி மொழியை நோக்கி வாசகனை இக்கட்டுரைகள் வெகு நுட்பமாக நகர்த்திச் செல்கின்றன More info →
Buy from Alibris.
துயில்

துயில்

Rs 460
வாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள்தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன. இத்தரிசனத்தை ஒரு புனைவாக, கலையாக மாற்றுவதில் பெரும் வெற்றியடைந்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இப்புதிய நாவல். நம்மைக் காலகாலமாகத் தொடர்ந்துவரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறதவரை பிணியின் துயரினை ஒருபோதும் நம்மால் கடக்கவே முடியாது என்ற மகத்தான உண்மையை துயில் ஆழமாக நிறுவுகிறது. வெவ்வேறு காலங்களில் நிகழும் இந்நாவலில் அத்தியாயங்களுக்கு இடையே மனித வாழ்வு அடையும் கோலங்கள் ஏற்படுத்தும் துயரமும் பரவசமும் எல்லையற்றவை. மனித உடலை இந்திய மரபும் மேற்கத்திய மரபும் ஏற்கும் விதத்தில் அகவயமான, புறவயமான இரண்டுபாதைகள் இருப்பதை அடையாளம் காணும் எஸ்.ராமகிருஷ்ணன் அவற்றின் சாராம்சமான வாழ்வியல் நோக்கின் மையத்திற்கே நெருங்கிச் செல்கிறார். இந்த அளவிற்கு காட்சி பூர்வமான, தத்துவார்த்தத்தின் கவித்துவம் செறிந்த பிரிதொரு நாவல் தமிழில் எழுதப்பட்டதில்லை. More info →
Buy from Alibris.